சூலூர்: பாலியல் வன்புணர்ச்சி வழக்கு.. பாய்ந்தது குண்டர் சட்டம்
கோவை மாவட்டம் சூலூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் பாலியல் வன்புணர்ச்சி வழக்கில் தொடர்புடைய விஷ்ணு (27) மற்றும் சுரேஷ் (41) ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளனர். அவர்கள் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் கோவை மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரைத்தார். பரிந்துரையின் அடிப்படையில் கோவை மாவட்ட ஆட்சியர், விஷ்ணு மற்றும் சுரேஷ் மீது குண்டர் தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்க உத்தரவு பிறப்பித்தார். உத்தரவின்படி குண்டர் தடுப்புச் சட்டத்திற்கான ஆணை சிறையில் இருக்கும் அவர்களிடம் இன்று (அக்.20) வழங்கப்பட்டது.