கோவை சூலூர் பகுதியைச் சார்ந்த ரோகித் (19) அங்கு உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் படித்து வந்த பொழுது பல்வேறு குற்ற செயல்களில் ஈடுபட்டதனால் டிஸ்மிஸ் செய்யப்பட்டு இருக்கின்றான்.
இந்த நிலையில் ஓணம் பண்டிகையின் பொழுது தனியார் கல்லூரி வளாகத்தில் மாணவர்கள் ஓணம் பண்டிகையை கொண்டாடிய பொழுது, கல்லூரியின் பழைய ஐ. டி கார்டை வைத்துக் கொண்டு ஓணம் பண்டிகை கொண்டாட சென்று இருக்கின்றான்.
அப்போது அங்கு உள்ள மாணவர்களுடன் சண்டையிட்ட ரோஹித் 3 மாணவர்களை கத்தியால் குத்தி காயப்படுத்தி இருக்கின்றான்.
இது தொடர்பாக சூலூர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் கொலை முயற்சி பிரிவின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருகிறது. இந்நிலையில், விபத்தில் காயம் அடைந்து மருத்துவமனையில் ரோஹித் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு இருப்பதனை நேற்று போலீசார் தெரிந்து கொண்டனர். மருத்துவமனைக்கு விரைந்த
சூலூர் போலீசார் குட்டி தாதா ரோகித்தை கைது செய்து நேற்று சிறையில் அடைகின்றனர்.