நில அளவையர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீஸ் சோதனை!

53பார்த்தது
சூலூர் வடுகபாளையத்தை சேர்ந்தவர் லோகநாதன் இவர் சென்னையில் நில அளவை ஆய்வாளராக பணியாற்றி வருகிறார், இவர் சென்னையில் 1200 சதுர அடி அரசு நிலத்தை ஆக்கிரமிப்பு செய்ய உதவியதாக இவர் உட்பட ஆறு பேர் மீது சென்னை லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இதையடுத்து சென்னையில் இருந்து மோசடிக்கு துணை போன அதிகாரிகளின் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினர். நில அளவை ஆய்வாளர் லோகநாதனின் வீடு சூலூர் வடுக பாளையத்தில் உள்ளது. அந்த வீட்டில் லோகநாதனின் தாய் வசித்து வருகிறார். நேற்று அதிகாலை 7: 00 மணி முதல் நேற்று இரவு வரை லஞ்ச ஒழிப்பு போலீஸ் இன்ஸ்பெக்டர் கவுசல்யா தலைமையில் போலீசார் தீவிர சோதனை மேற்கொண்டனர். வீட்டில் இருந்த ஆவணங்கள் உள்ளிட்டவற்றை கைப்பற்றி லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அரசு நில அபகரிப்பு விவகாரத்தில் கோவை நில அளவை ஆய்வாளர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீஸ் சார் சோதனை நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி