கோவை மாவட்டம் சூலூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்டு அரசூர் ஊராட்சி இருந்து வருகிறது. இங்கு வண்ணார் குட்டை என்று அழைக்கப்படும் குட்டையானது இருந்து வருகிறது. பயன்பாடு இல்லாத காரணத்தினால் இந்த குட்டையில் அரசூர் ஊராட்சியில் சேகரிக்கப்படும் குப்பைகள் கொட்டப்படுகிறது. இங்கு ஊராட்சி குப்பைகள் இல்லாமல் மர்ம நபர்கள் கோழி கழிவுகள் மற்றும் மருத்துவக் கழிவுகளையும் கொட்டி செல்கின்றனர் இதனால் நோய் தொற்று ஏற்படும் அபாயமும் குப்பைகளால் அதிக அளவில் ஈக்கள் தொல்லையும் இருந்து வருகிறது வீடுகளில் ஈக்கள் தொல்லை காரணமாக நோய் தொற்று ஏற்படுகிறது இதனால் வாந்தி பேதி உள்ளிட்ட பாதிப்புகளால் பொதுமக்கள் பாதிப்புக்கு உள்ளாகின்றனர் மேலும் இங்கு செயல்பட்டு வந்த பால்வாடி கூடத்தில் படித்த குழந்தைகளுக்கு நோய் பரவியதால் இந்தப் பள்ளிக்கூடம் தற்காலிகமாக மூடப்பட்டு இருக்கிறது இதனால் அரசு பால்வாடி இயங்காமல் இருந்து வருகிறது உடனடியாக இந்த குப்பை குப்பைகளை கொட்டாமல் வேறு இடத்திற்கு மாற்றித் தர வேண்டும் என பொதுமக்கள் வட்டாட்சியர் மற்றும் மாவட்ட ஆட்சியரிடம் பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறுகின்றனர்.
இதுகுறித்து பேசிய பொதுமக்கள்,
குப்பைகளிலிருந்து பரவும் ஈக்கள் மற்றும் துர்நாற்றத்தால் வாழ முடியவில்லை என புகார் கூறுகின்றனர்.