ஜாதி பாகுபாடு -மாணவியின் தாய் புகார்!

85பார்த்தது
கோவை , சூலூர் ராசிபாளையத்தைச் சேர்ந்த இந்திராகாந்தி தனது மகளுக்கு ஜாதியை காரணம் காட்டி பேச்சுப் போட்டியில் இரண்டாம் பரிசு வழங்கப்பட்டதாக கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று புகார் அளித்துள்ளார்.
இந்திராகாந்தியின் மகள் ராசிபாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படித்து வருகிறார். ஆகஸ்ட் 15 சுதந்திர தினத்தை முன்னிட்டு பள்ளியில் நடைபெற்ற பேச்சுப் போட்டியில் தனது மகள் மட்டுமே கலந்து கொண்டதாகவும், ஆனால் தலைமை ஆசிரியர் ஜாதியை காரணம் காட்டி பேச்சுப் போட்டியில் பங்கேற்காத வேறு மாணவிக்கு முதல் பரிசையும் தனது மகளுக்கு இரண்டாவது பரிசையும் அளித்ததாக இந்திராகாந்தி குற்றம் சாட்டியுள்ளார். இது குறித்து தலைமை ஆசிரியரிடம் கேட்டபோது, உனது குழந்தைக்கு பரிசு கொடுத்ததே தவறு என்று கூறி தன்னையும் தன் மகளையும் மன உளைச்சலுக்கு ஆளாக்கியதாக இந்திராகாந்தி தெரிவித்துள்ளார். ஜாதியின் அடிப்படையில் பரிசளித்தது வேதனை அளிப்பதாக கூறும் இந்திராகாந்தி தலைமையாசிரியர் நிர்மலா ஆரோக்கிய மேரி மற்றும் ஆசிரியர் சாந்தி ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார். ஏற்கனவே இது குறித்து புகார் அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறும் இந்திராகாந்தி இதுபோன்ற சம்பவங்கள் இனி நடைபெறாமல் இருக்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி