சுங்க கட்டண உயர்வை கண்டித்து போராட்டம்!

80பார்த்தது
கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி செங்கம்பள்ளி சுங்கச்சாவடியில் கட்டண உயர்வை கண்டித்து மனித நேய மக்கள் கட்சியினர் முற்றுகை போராட்டம் நடத்தினர். இந்த போராட்டம் நேற்று மாலை நடைபெற்றது. தமிழகத்தில் ஏற்கனவே 67 சுங்கச்சாவடிகள் இருந்த நிலையில், மேலும் விழுப்புரம், திருவண்ணாமலை மற்றும் கிருஷ்ணகிரியில் 3 புதிய சுங்கச்சாவடிகளை தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் அறிவித்துள்ளது. இதன் மூலம் சுங்கச்சாவடிகளின் எண்ணிக்கை 70 ஆக உயர்ந்துள்ளது. தமிழ்நாட்டில் பத்துக்கும் மேற்பட்ட சுங்கச்சாவடிகள் அதன் தவணை காலாவதி ஆன பின்பும் கூட தொடர்ந்து கட்டண வசூலில் ஈடுபடுவதாக கூறப்படுகிறது. இதனைக் கண்டித்து, செங்கல்பட்டு மாவட்டம் பரனூர், வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா, விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி, கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி, திருச்சி மாவட்டம் துவாக்குடி, மதுரை மாவட்டம் கப்பலூர், நெல்லை மாவட்டம் நாங்குநேரி என ஏழு சுங்கச்சாவடிகளை முற்றுகையிடும் போராட்டத்தை மனிதநேய மக்கள் கட்சி நேற்று நடத்தியது. மேலும், அரசு நிர்ணயித்த விதிகளின்படி பல சுங்கச்சாவடிகளில் ஆம்புலன்ஸ் வசதி, விபத்து நடந்தால் உடனடியாக நிவாரணம் மற்றும் சிகிச்சைக்கான கட்டமைப்புகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாதது குறித்தும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி