திமுக அரசு தேவை இல்லாத வேலைகளை செய்கிறது - தமிழிசை!

58பார்த்தது
கோவை வந்த பாஜக மாநில முன்னாள் தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன், விமான நிலையத்தில் நேற்று செய்தியாளர்களிடம் பேசினார். அவர் திமுகவின் குடும்ப அரசியலை கடுமையாக விமர்சித்தார். வெளிநாடுகளுக்கு சென்று முதலீடுகளை முதல்வர் ஈர்த்து வருவதாக தமிழக அரசு கூறி வரும் நிலையில் சாம்சங் தொழிலாளர்கள் போராட்டம் தொடர்கிறது. கமிஷன், ஊழல் என கம்யூனிஸ்ட்கள் உள்ள வரை தமிழகத்தில் தொழிற்சாலைகளை சிறப்பான முறையில் நடத்த முடியாது என்று அவர் குறிப்பிட்டார். மேலும், குழந்தைகளுக்கு அரசு வழங்கும் முட்டைகள் சந்தைகளில் விற்பனை செய்யப்படுவதாகவும், கல்வித்துறையில் முறைகேடுகள் நடப்பதாகவும் தமிழிசை குற்றம்சாட்டினார். இவை குறித்து கல்வித்துறை அமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி