மாதந்தோறும் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால் கோவையின் செங்கந்துறை துணை மின் நிலையத்தில் இன்று(அக்.1) மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி இன்று காலை 9 மணியிலிருந்து மாலை 5 மணி வரை செங்கத்துறை, காடாம்பாடி, ஏரோ நகர், காங்கயம் பாளையம், பி. என். பி. , நகர், மதியழகன் நகர் ஆகிய பகுதிகளில் மின்விநியோகம் தடை செய்யப்படும் என்று ஒண்டிப்புதூர் செயற்பொறியாளர் பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.