கோவை மாவட்டம் சூலூரில் 249 விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டிருந்தது. நொய்யல் ஆற்றில் கரைக்கப்படுவதற்காக அணிவகுத்து நின்ற விநாயகர் ஊர்வலத்தை சட்டமன்ற உறுப்பினர் வி. பி கந்தசாமி தொடங்கி வைத்தார். சிலைகளுக்கு முன்னால் பத்தடி உயரத்தில் தத்ரூபமான விநாயகர் வேஷம் கட்டி நியான் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட மனிதர்கள் துடுப்பு இசைக்கு நடனமாடி சென்றது அங்கிருந்தவர்கள் அனைவரையும் வெகுவாக கவர்ந்தது. இரண்டு மணி நேரம் நீடித்த இந்த ஊர்வலம் நொய்யல் ஆற்றை வந்தடைந்து விநாயகர் சிலைகள் கரைக்கப்பட்டது. நியான் விளக்குகளால் விநாயகர் வேஷம் மற்றும் விமர்சையான ஊர்வலம் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.