பாஜக பிரமுகரை அரிவளால் வெட்டிய வழக்கில் மூன்று பேர் கைது
திருவள்ளூர் அருகே உள்ள சிறுவாணூரில் பாஜக மாவட்ட செயலாளர் ரமேஷ் குமாரை வீட்டின் அருகே இருந்த நிலத்தை அகற்ற வந்ததால் ஆத்திரம் அடைந்து அரிவாளால் வெட்டிய வேலு, விஜி, திருமுருகன் ஆகிய மூன்று பேரை தாலுகா காவல்துறையினர் கைது செய்து வழக்குப்பதிந்தனர். பின்னர் மூவரையும் திருவள்ளூர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி நேற்று (செப்.19) சிறையில் அடைத்தனர்.