ஊராட்சி மன்ற தலைவரை தகுதி நீக்கம் செய்து ஆட்சியர் உத்தரவு

78பார்த்தது
திருவள்ளூர் மாவட்டம் தொடுகாடு ஊராட்சி மன்ற தலைவர் வெங்கடேசன் பாரதிய ஜனதா கட்சியில் நிர்வாகியாக உள்ள இவர் பல்வேறு நிகழ்வுகளில் தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம் 1994-ல் தெரிவிக்கப்பட்டுள்ள ஊராட்சி மன்ற தலைவருக்கு விதிக்கப்பட்ட சட்டப்படியான கடமையிலிருந்து தவறியதாகவும், ஊராட்சிக்கு நிதியிழப்பு ஏற்படுத்தியது மற்றும் அரசு விதிமுறைகளையும் சட்ட விதிமுறைகளையும் மீறி தன்னிச்சையாக செயல்பட்டது நிரூபணமாவதால் தொடுகாடு ஊராட்சி மன்ற தலைவர் வெங்கடேசன் தொடர்ந்து ஊராட்சி மன்ற தலைவராக செயல்பட்டால் ஊராட்சிக்கு பெருமளவு நிதியிழப்பு ஏற்படுத்துவதுடன் தனது அதிகாரத்தினை மேலும் துஷ்பிரயோகம் செய்வார் என்பதை கருத்தில் கொண்டு தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம் 1994 பிரிவு 205 (11)-ல் ஊராட்சிகளின் ஆய்வாளர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவருக்கு அளிக்கப்பட்டுள்ள அதிகாரத்தினை பயன்படுத்தி தொடுகாடு ஊராட்சி மன்ற தலைவர் வெங்கடேசனை 03. 09. 2024 அன்று முதல் ஊராட்சி மன்ற தலைவர் பதவியிலிருந்து நீக்கம் செய்வதாக திருவள்ளூர் மாவட்ட டாக்டர் பிரபுசங்கர் உத்தரவு பிறப்பித்துள்ளார் திருவள்ளூர் வட்டாட்சியர் மற்றும் வருவாய் ஆய்வாளர் விசாரணை நடைபெற்ற நிலையில் தொடுகாடு ஊராட்சி மன்ற தலைவரை தகுதி நீக்கம் செய்து திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் உத்தரவிட்டுள்ளார்

தொடர்புடைய செய்தி