மறுசீரமைப்பு வாக்குச்சாவடி பட்டியலை வெளியிட்ட ஆட்சியர்

82பார்த்தது
திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று மாவட்டதேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் அங்கீகரிக்கப்பட்ட அனைத்து கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் வாக்கு சாவடிகளை மறுசீரமைப்பு செய்த வாக்குசாவடி பட்டியலை வெளியிட்டார்கள்.
இந்திய தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதலின் படியும், சென்னை தலைமை தேர்தல் அலுவலர் / முதன்மை அரசுச் செயலர் அவர்களின் அறிவுரையின் படியும், நகர்புறம் மற்றும் ஊரகப் பகுதிகளில் 1500 வாக்காளர்களுக்கும் அதிகமாகவுள்ள வாக்கு சாவடிகளை மறுசீரமைப்பு அறிவுறுத்தப்பட்டுள்ளது அதன்படி, வரைவு வாக்குச்சாவடி பட்டியல் (29. 08. 2024) அன்று வெளியிடப்பட்டது. இது தொடர்பாக, ஆட்சேபனை ஏதேனும் இருப்பின் 7 தினங்களுக்குள் எழுத்து மூலமாக வாக்காளர் பதிவு அலுவலர்கள், உதவி வாக்காளர் பதிவு அலுவலர் அல்லது மாவட்டதேர்தல் அலுவலர், மாவட்ட ஆட்சியர் அவர்களுக்கு தெரிவிக்கலாம் அறிவுறுத்தப்பட்டிருந்தது. மேலும், திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 10 சட்டமன்றத் தொகுதிகளில் உள்ள 3665 வாக்குச்சாவடிகளை மாவட்ட தேர்தல் அலுவலர் அவர்களின் அறிவுரைப்படி வாக்காளர் பதிவு அலுவலர்கள் மற்றும் உதவிவாக்காளர் பதிவு அலுவலர்கள் தணிக்கை செய்து தேர்தல் ஆணையத்தின் விதிகளுக்குட்பட்டு முன் மொழிவுகள் அனுப்பி வைத்ததின்பேரில், திருவள்ளூர் மாவட்டத்தில் கீழ்க்கண்டவாறு வாக்குச்சாவடிகள் மறுசீரமைப்பு செய்யப்பட்டுள்ளது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி