அரசு மருத்துவமனையில் மதுபோதையில் சிகிச்சை பார்த்த மருத்துவர்

74பார்த்தது
திருவள்ளூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை சுமார் ரூ. 200 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்டு தற்பொழுது அனைத்து வசதிகள் கொண்ட மருத்துவமனையாக செயல்பட்டு வருகிறது, இந்த நிலையில் பணியில் இருந்த பொது மருத்துவர் நல்லதம்பி என்பவர் இ. சி. ஜி. ஒரு நோயாளிக்கு எடுத்துவிட்டு அந்த இசிஜியை வைத்து மற்றொரு நோயாளிக்கு சிகிச்சை பார்த்ததாக கூறப்படுகிறது. இதனைக் கண்ட மற்ற நோயாளிகளும் நோயாளிகளுடன் வந்தவர்களும் கேட்டபோது மருத்துவர் அனைவரையும் தரக்குறைவாக ஒருமையில் பேசி அனைவரும் வெளியே செல்லும்படி அதிரடி அலப்பறையில் ஈடுபட்டதாகவும் நோயாளிகள் கூறப்படுகிறது. இந்நிலையில் இதனால் சந்தேகம் அடைந்த நோயாளிகள் மற்றும் அவர்களுடன் வந்தவர்கள் பார்த்தபோது அவர் குடித்துவிட்டு தன்னிலை மறந்து நோயாளிகளுக்கு சிகிச்சை பார்த்ததாகவும் குற்றம் சாட்டியுள்ள நோயாளிகள் உங்களை நம்பி தானே வந்தோம் இப்படி குடித்துவிட்டு சிகிச்சை பார்க்கிறீர்களே உயிருக்கு ஏதாவது ஆனால் என்ன செய்வது என்று மருத்துவருடன் வாக்குவாதத்தில் ஈடுபடும் வீடியோவும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனை அடுத்து மருத்துவமனையில் இரவு காவல் பணியில் இருந்த காவலர்கள் மருத்துவரை மீட்டு அங்கிருந்து கொண்டு சென்றனர்இது சம்பந்தப்பட்ட வீடியோ தற்பொழுது சமூக வலைதளங்களில் வைரலாகி திருவள்ளூர் பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி