திருவள்ளூர் மாவட்டம் போளிவாக்கம் பகுதியில் உள்ள தனியார் அட்டைப்பெட்டி தயாரிக்கும் ஸ்டார் பாக்சஸ் தொழிற்சாலையில் கடந்த 27ம் தேதி அன்று மாலை வலசைவெட்டிக்காடு பகுதியைச் சேர்ந்த இளைஞர் சீனிவாசன் என்பவர் தொழிற்சாலையில் பாதுகாப்பு செக்யூரிட்டி மீறி தொழிற்சாலையில் உள்ள
தண்ணீர் சுத்திகரிப்பு தொட்டியில் விழுந்து உயிரிழந்தார்.
இதைத் தொடர்ந்து அவருடைய உறவினர்கள் தொடக்கத்தில் சீனிவாசன் உயிரிழப்புக்கு தொழிற்சாலை நிர்வாகமே காரணம் என குற்றம் சாட்டி சடலத்தை வாங்க மறுத்து வந்தனர். இந்நிலையில் அவர் பாதுகாப்பு மீறி சென்று உயிரிழந்தது உறுதியானதால் அவரின் சடலத்தை பெற்றுக்கொள்ள உறவினர்கள் இன்றைய தினம் ஒப்புக்கொண்டனர்.
அதைத் தொடர்ந்து அவருடைய உடல் சென்னை கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் இருந்து பிரேத பரிசோதனை முடிந்து அவர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்நிலையில் சீனிவாசன் உறவினர் ஹரிபாபு என்பவர் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ததன் அடிப்படையில் தனது தம்பி உயிரிழப்புக்கும் தொழிற்சாலைக்கும் எந்தவித சம்பந்தம் இல்லை என்றும் அவர் இதற்கு முன் தொழிற்சாலைக்குள் பணியாற்றவில்லை என்றும் அதனால் சில யூடியூப் சேனல்களில் தவறான செய்திகள் பரப்பப்பட்டு உள்ளதாகவும் செய்தியாளர்கள் சந்திப்பில் விளக்கம் அளித்துள்ளார்.