மெழுகுவர்த்தி ஏற்றி கொல்கத்தா மருத்துவ மாணவிக்கு அஞ்சலி

70பார்த்தது
மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் மெழுகுவர்த்தி ஏற்றி கொல்கத்தா மருத்துவ மாணவிக்கு அஞ்சலி செலுத்தினர்.

திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் கொல்கத்தாவில் உயிரிழந்த மருத்துவ மாணவிக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக மெழுகுவத்திகளை ஏற்றி நினைவேந்தலை நடத்தினர். தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கத்தின் திருவள்ளூர் மாவட்ட தலைவர் க. திவ்யா தலைமையில் நடைபெற்ற நினைவேந்தல் நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளர் திருத்தணி சமூக பாதுகாப்பு தாசில்தார் க. வெண்ணிலா உள்ளிட்ட சங்கத்தின் நிர்வாகிகள் பதாகைகளை ஏந்தி உயிரிழந்த மருத்துவ மாணவிக்கு நீதி கிடைக்க வேண்டும் மத்தியஅரசு புதிதாக சட்டம்இயற்ற வேண்டும் என மருத்துவர்களுக்கு குரல் கொடுத்தனர். நிகழ்வில் பங்கேற்ற அனைவருக்கும் சங்க நிர்வாகி பா. மணிகண்டன் நன்றி தெரிவித்தார்.

தொடர்புடைய செய்தி