திருவள்ளூர் நகராட்சிக்கு உட்பட்ட 1வது மற்றும் 2வது வார்டுகளில் அனைத்திந்திய அதிமுகவில் உறுப்பினர்களாக உள்ளவர்களுக்கு பார் கோடுடன் கூடிய புதிய கட்சி உறுப்பினர் அடையாள அட்டைகளை முன்னாள் அமைச்சர் பி.வி.ரமணா வழங்கினார் அதிமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட அரசு நலத் திட்டங்கள் கிடப்பில் போடப்பட்டுள்ளது என்று குற்றச்சாட்டிய முன்னாள் அமைச்சர் பி.வி ரமணா மீண்டும் அதிமுக ஆட்சி அமைய கட்சி தொண்டர்கள் முழுமூச்சுடன் செயல்பட வேண்டும் என்றும் புதிய உறுப்பினர்களை சேர்த்து அவர்களுக்கு அடையாள அட்டை வழங்கி கட்சி பணியாற்ற வார்டு வாரியாக ஒற்றுமையுடன் இணைந்து செயல்படுமாறு கட்சியினருக்கு அறிவுறுத்தினார்.
இதில் திருவள்ளூர் நகர செயலாளர் கந்தசாமி, திருவள்ளூர் நகர் மன்ற உறுப்பினர் செந்தில்குமார் முன்னிலையில் முன்னாள் அமைச்சர் திருவள்ளூர் மேற்கு மாவட்ட கழக செயலாளர் பி. வி ரமணா கலந்துகொண்டு அண்ணா திமுக உறுப்பினர் அட்டைகளை வழங்கி பேசினார். திமுக ஆட்சி மீது மக்கள் நம்பிக்கை இழந்து விட்டனர் என்றும், அடிப்படை வசதிகளையும் நலத்திட்ட உதவிகளையும் வழங்கவில்லை என்றும் மீண்டும் அதிமுக ஆட்சி அமைய மக்கள் எதிர்பார்க்கின்றனர் என்றும் அதிமுக ஆட்சியில் நடைபெற்ற சாதனைகளை எடுத்துக் கூறி அமோக வெற்றி பெற பாடுபட வேண்டும் என தெரிவித்தார்.