மெக்கானிக்கை தாக்கிய இளைஞர்கள்: போலீசார் வழக்கு பதிவு

75பார்த்தது
திருவள்ளூர் மாவட்டம் பூண்டி அருகே சதுரங்கப்பேட்டை பகுதியில் மோகன்தாஸ் என்பவர் மெக்கானிக் கடை வைத்து நடத்தி வருகிறார் கடந்த 2 தினங்களுக்கு முன்பு மாலை வழக்கம்போல் அவரது மெக்கானிக் கடையில் வாகனங்களை பழுது பார்த்துக் கொண்டிருந்தபோது நெய்வேலி காட்டுரோடு பகுதியைச் சேர்ந்த 3 இளைஞர்கள் இருசக்கர வாகனத்தை தள்ளிக் கொண்டு வந்து கடையின் முன்பு நிறுத்தி வீல் செயினை டைட் செய்யுமாறு கேட்டுள்ளனர் அதற்கு ஏற்கனவே வேறொரு வாகனத்தை பழுது பார்த்துக்கொண்டிருந்த மோகன் தாஸ் அந்த வாகனத்தை முடித்துவிட்டு பத்து நிமிடத்தில் சரி செய்து தருகிறேன் என கூறியதால் திடீரென கோபம் அடைந்த இளைஞர்கள் முதலில் எனது வாகனத்தை சரி செய்து தா என வாக்குவாதத்தில் ஈடுபட்டு ஒருமையில் பேசியதாக கூறப்படுகிறது இதனால் மோகன் தாஸ் எதற்காக ஒருமையில் பேசுகிறீர்கள் என கேட்டதற்கு மோகன்தாசை இளைஞர்கள் தாக்கியுள்ளனர் அருகில் இருந்த இரும்பு கம்பி மற்றும் கைகளால் மோகன்தாஸை துரத்தி சர மாறியாக தாக்கியதால் நிலைகுலைந்து கீழே விழுந்தார் பலத்த காயம் ஏற்பட்டது, அதில் ஒரு இளைஞர் பயந்து போய் அவர் நெற்றியில் வரும் ரத்தத்தை துடைத்த நிலையில் மற்றொரு இளைஞர் மீண்டும் மெக்கானிக் மோகன்தாஸிடம் ரகலையில் ஈடுபட்டு அடிக்க பாய்ந்த நிலையில் அருகில் இருந்தவர்கள் அவர்களை அதட்டி அனுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது இதுகுறித்து பென்னலூர்பேட்டை போலீசார் வழக்கு பதிந்து விசாரணை.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி