திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் ஒன்றியம் மேல்நல்லாத்துர் கிராமத்தில் அமைந்துள்ளது தண்டுபாட்டை ரோடு. சுமார் ரூ. 50 லட்சம் மதிப்பில் போடப்படும் சிமெண்ட் சாலை தரமற்ற முறையில் போடப்படுகிறது. 15 ஆண்டுக்கு முன் போடப்பட்ட தண்டுபாட்டை சாலையில் இரும்பு கம்பியுடன் வலுவான நிலையில் போடப்பட்டது. மேலும் இவ்வழியாக கனரக வானங்கள் தண்ணீர் லாரி, டிப்பர் லாரி செல்லும் பிரதான சாலையாக உருவாகி வருகிறது மற்றும் தண்டுபாட்டை செல்லும் சாலை மழை வெள்ளத்தால் சேதம் அடைந்தது,
தற்பொழுது சுமார் 50 லட்சம் மதிப்பில் போடப்படும் சிமெண்ட் சாலை கம்பி கூட இல்லாமல் போடப்படுவதால் தண்டுபாட்டை சாலை தரமற்ற சாலையாக உள்ளது என சமூக ஆர்வலர்கள் புகார் தெரிவித்தனர். தண்டுபாட்டை சாலையை முறையாக அதிகாரிகள் ஆய்வு செய்து தரமான முறையில் போட வேண்டும் என்று மேல்நல்லாத்தூர் கிராம மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.