திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு
இன்று திருவள்ளூர், காஞ்சிபுரம், புதுச்சேரி, சென்னை ஆகிய தமிழக கடலோர மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தற்போது உருவாகும் தாழ்வுமண்டலம் புயலாக அல்லது தீவிரப்புயலாக வலுபெற வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழகம் மற்றும் சென்னையில் இன்று, நவம்பர் 25, 26, 27, 28 வரை நல்ல மழை பெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது.