ஆபத்தான நிலையில் பயணம்: பொதுமக்கள் வாகன ஓட்டிகள் அச்சம்

85பார்த்தது
திருவள்ளூர் மாவட்டத்தின் தலைநகரான திருவள்ளூரில் 10க்கும் மேற்பட்ட அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் சுற்று வட்டார கிராமங்களை சார்ந்த 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர், மாணவர்கள் தினந்தோறும் அரசு பேருந்துகள் தனியார் பேருந்துகள் இருசக்கர வாகனங்கள் மற்றும் ஆட்டோக்களில் பயணம் செய்து திருவள்ளுரில் உள்ள பள்ளிகளில் படித்துவிட்டு மாலை பள்ளி முடிந்தவுடன் மீண்டும் வீட்டிற்கு செல்லுகின்றனர்
இந்த நிலையில் திருவள்ளூரில் இருந்து ஊத்துக்கோட்டை மார்க்கமாக செல்லும் அரசு மற்றும் தனியார் பேருந்துகளில் மாணவர்கள் பேருந்து பயணிகளை அச்சுறுத்தும் வகையில் கூச்சலிட்டும் ஆபாசமான வார்த்தைகளில் பேசிக்கொண்டும் பயணம் செய்வதாக தொடர்ந்து குற்றச்சாட்டுகள் உள்ள நிலையில் அதற்கு ஒரு படி மேலே சொல்லும் அளவிற்கு அரசு பேருந்தில் பயணம் செய்த மாணவர்கள் தரையில் கூர்மையான ஆயுதங்களை பஸ்ஸில் பேருந்தில் பயணம் செய்தவாறு தரையில் தேய்த்தும் பேனர்களை கிழித்தும் அதனைப் பிடித்துக் கொண்டு ஓடுவதும் பின்னர் ஓடும் பேருந்தில் ஆபத்தான முறையில் ஏறுவதும் பேருந்தில் பின்பக்க படியில் ஏறி அராஜகமாக பயணிக்கும் வீடியோ தற்பொழுது திருவள்ளூர் பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி