சேலம் நகரம் - Salem City

நிலத்தை மீட்டு தர கோரி நரிக்குறவர்கள் கலெக்டரிடம் மனு

தமிழ்நாடு நரிக்குறவர் சமுதாய சங்கத்தின் மாநில தலைவர் பீட்டர் ஆபோ தலைமையில் நரிக்குறவர்கள் சமூகத்தை சேர்ந்த 25 குடும்பங்களில் இருந்து 100க்கும் மேற்பட்டோர் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்தனர். அப்போது திடீரென வளாகத்தின் முன்பு அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர் இதை அறிந்த பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி அதிகாரியை சந்திக்க அனுமதி வழங்கினர். தொடர்ந்து அதிகாரியை சந்தித்து புகார் மனு வழங்கினர். இது குறித்து தமிழ்நாடு நரிக்குறவர் சமுதாய சங்கத்தின் மாநில தலைவர் பீட்டர் ஆபோ செய்தியாளர்களிடம் கூறும்போது வீரகனூர் பேரூராட்சியில் நரிக்குறவர் காலணியில் வசித்து வரும் சுமார் 160 குடும்பங்களுக்கு முன்னாள் முதல்வர் காமராஜர் காலத்தில் 320 ஏக்கர் நிலம் நரிக்குறவர் இன மக்களுக்கு வழங்கினார். ஆனால் அப்பகுதியை சேர்ந்த சிலர் நரிக்குறவர்களை ஏமாற்றி 320 ஏக்கர் நிலத்தையும் அபகரித்துக் கொண்டனர் இது நாள் வரை அவர்களுக்கு நிலம் வீடு இல்லாமல் தெருவில் வசிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இது குறித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலும் ஆத்தூர் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்திலும் பலமுறை மனு அளித்து எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மாவட்ட நிர்வாகம் அவர்களுக்கு வழங்க வேண்டிய 320 ஏக்கர் நிலத்தை மீட்டுத் தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தனர்.

வீடியோஸ்


రంగారెడ్డి జిల్లా