சேலம் அரசு கலைக்கல்லூரியில் மாணவர்கள் போராட்டம்

85பார்த்தது
சேலம் பெரியார் பல்கலைக்கழக நிர்வாகம் அதன் இணைவு பெற்ற அனைத்து கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளுக்கும் தேர்வு கட்டணத்தை உயர்த்தி உள்ளது. இளநிலை மற்றும் முதுநிலை படிப்பிற்கு ஒரு பாடத்திற்கு ரூ. 25 உயர்த்தப்பட்டுள்ளது. மேலும், அறிவியல் பாடப்பிரிவு மாணவர்களுக்கு செய்முறை தேர்வு கட்டணமும் உயர்த்தப்பட்டுள்ளது. இதற்கு இந்திய மாணவர் சங்கம் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
இந்நிலையில், சேலம் அரசு கலைக்கல்லூரியில் நேற்று காலை தேர்வு கட்டண உயர்வை கண்டித்தும், புதிய கட்டணத்தை திரும்ப பெற வலியுறுத்தியும் மாணவர்கள் திடீரென உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்திய மாணவர் சங்கத்தின் கிளை செயலாளர் கோகுல்ராஜ் தலைமையில் நடந்த இந்த போராட்டத்தில் ஏராளமான மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். இந்திய மாணவர் சங்க மாவட்ட செயலாளர் பவித்ரன் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்.

இதனிடையே போராட்டத்தில் ஈடுபட்டிருந்த மாணவர்களிடம் கல்லூரி முதல்வர் செண்பகவள்ளி பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது அவர், பல்கலைக்கழக நிர்வாகம் தேர்வு கட்டணத்தை உயர்த்தியதால் அதனை கல்லூரி நிர்வாகமும் பின்பற்ற வேண்டியுள்ளது, என்றார்.
அதற்கு மாணவர்கள் தரப்பில், சேலம் அரசு கலைக்கல்லூரி தன்னாட்சி கல்லூரி என்பதால் தேர்வு கட்டண உயர்வை நீங்களே திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தினர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி