மாநகராட்சி வார்டு கூட்டத்தில் எம்எல்ஏ அருள் போராட்டம்

59பார்த்தது
சேலம் மாநகராட்சி 15-வது வார்டு சபை கூட்டம் நேற்று குமரன் நகர் பகுதியில் நடைபெற்றது. இதற்கு அஸ்தம்பட்டி மண்டல குழு தலைவரும், வார்டு கவுன்சிலருமான உமாராணி தலைமை தாங்கினார். மாநகராட்சி சுகாதார அலுவலர் பிரபாகரன் வரவேற்று பேசினார்.
கூட்டம் நடைபெற்று கொண்டிருந்த போது, பாட்டாளி மக்கள் கட்சி எம். எல். ஏ. அருள் அங்கு சென்று, மாநகராட்சி அலுவலர் பிரபாகரனிடம் சரமாரியாக கேள்வி எழுப்பினார்.
அவர், தொகுதி எம். எல். ஏ. வுக்கு தகவல் கொடுக்காமல் வார்டு கமிட்டி கூட்டம் யாரை வைத்து நடத்துகிறீர்கள்? இந்த தொகுதி எம். எல். ஏ. நான். கூட்டம் நடத்த யார் அனுமதி கொடுத்தது. பொறுப்பு அதிகாரி நீங்கள் தானே? முதல்-அமைச்சர் அனைவரையும் அழைத்து கூட்டம் நடத்த வேண்டும் என்று கூறுகிறார். மாநகராட்சி சார்பில் நடத்தப்படும் ஒரு கூட்டத்திற்கு கூட என்னை அழைக்கவில்லை என ஆவேசமாக கேள்வி எழுப்பினார்.
அப்போது அலுவலர் மன்னித்துக்கொள்ளுங்கள் என்று கூறினர். அதற்கு எம். எல். ஏ. அருள், அருண் நகரில் குப்பை அள்ளுங்கள் என்று கூறி வருகிறேன். ஆனால் அல்ல மறுக்கிறீர்கள். அப்புறம் எதற்கு வார்டு கமிட்டி கூட்டம் நடத்துகிறீர்கள். கூட்டத்தை நடத்தாதீர்கள், கூட்டத்தை ரத்து செய்யுங்கள் என்று கூறினார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி