தமிழகத்தில் இன்றும், நாளையும் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. அதே நேரம் 2 நாள்களுக்கு வெப்பநிலை 2 முதல் 4 டிகிரி செல்சியஸ் வரை அதிகமாக இருக்கக்கூடும் என்றும் குறிப்பிட்டுள்ளது. வெப்பநிலை காரணமாக ஓரிரு இடங்களில் அசௌகரியம் ஏற்படலாம் என்றும் தெரிவித்துள்ளது சென்னையை பொறுத்தவரை, நகரின் ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்யலாம் என்றும் கூறியுள்ளது.