எடப்பாடி பழனிச்சாமிக்கு நன்றி தெரிவித்த விவசாயிகள்

54பார்த்தது
அத்தி கடவு அவிநாசி திட்டம் அதிமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்டு தற்போது பணி நிறைவடைந்து உள்ளது. இந்த திட்டத்தை கொண்டு வந்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக முன்னாள் அமைச்சர் கே. சி. கருப்பணன் தலைமையில் விவசாயிகள் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தனர்.
இதனையடுத்து அவர் கூறும்போது
60 ஆண்டு கால அத்திக்கடவு-அவினாசி திட்ட பிரச்சினையை தீர்த்து வைக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை வைத்தனர். அந்த கோரிக்கையை ஏற்று அவினாசிக்கு நேரடியாக சென்று அத்திக்கடவு-அவினாசி திட்டத்திற்கு அடிக்கல் நாட்டினேன்.
அப்போது இந்த பணி வேகமாக, துரிதமாக நிறைவேற்றி தேவையான நீர் குளம், குட்டைகளில் நிரப்பி நிலத்தடி நீர் செழித்து விவசாயிகள் மகிழ்ச்சியோடு வேளாண்பணிகள் மேற்கொள்ளும் சூழ்நிலையை உருவாக்குவேன் என்று சொன்னேன்.

அதன்படி, அதிமுக ஆட்சியின் போது மாநில நிதியாக ரூ. 1, 605 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணி நடைபெற்று கொண்டிருந்தது. கொரோனா வந்த காரணத்தால் ஒரு ஆண்டு காலம் பணி தொய்வுற்றது. 85 சதவீத பணிகள் அதிமுக ஆட்சி இருக்கும் போதே நிறைவேற்றப்பட்டது. பிறகு ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, தி. மு. க. ஆட்சிக்கு வந்த பிறகு 15 சதவீத பணிகள், 40 மாத காலம் மெல்ல, மெல்ல நடைபெற்று நிறைவடைந்தது.
இவ்வாறு அவர் கூறினார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி