திருப்பதி லட்டின் தரம் குறித்து முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு கூறியது உண்மைதான் என திருப்பதி தேவஸ்தானம் கூறியுள்ளது. திருப்பதி தேவஸ்தான செயல் அலுவலர் ஷியாமளா ராவ் செய்தியாளர்கள் சந்திப்பில், "ஜூலை 6 மற்றும் 12-ம் தேதிகளில் 4 லட்டு நெய் மாதிரிகள் அனுப்பப்பட்டு பரிசோதனை செய்யப்பட்டது. அரசு அங்கீகாரம் பெற்ற ஆய்வகத்தின் முடிவுகளில் மாட்டு கொழுப்பு சேர்க்கப்பட்டது உறுதியானது" என்று தெரிவித்துள்ளார்.