பெரம்பலூர்: டிராக்டரை சுழல் கலப்பையுடன் திருடிச்சென்ற நபர் கைது
பெரம்பலூர் மாவட்டம் மங்களமேடு காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பெருமத்தூர் கிராமத்தைச் சேர்ந்த ஜெகநாதனின் மகன் பிரேம்குமார் என்பவர் தனக்கு சொந்தமான டிராக்டரை கடந்த 01. 10. 24 ஆம் தேதி இரவு 10. 00 மணிக்கு தனது வயலில் உள்ள கொட்டகையில் டிராக்டரை நிறுத்திவிட்டு சென்று அடுத்தநாள் அதிகாலை 5. 00 மணிக்கு பார்த்த போது டிராக்டர் மற்றும் அதனுடன் இருந்த சுழல் கலப்பையை காணவில்லை என்று மங்களமேடு காவல் நிலையத்தில் கொடுத்தார். புகார் அளித்ததன் பேரில் மங்களமேடு காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்தனர். பின்னர் மேற்படி சம்பவம் தொடர்பாக பல்வேறு கோணங்களில் தீவிர விசாரணை செய்தும், கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்ததிலும் அதே கிராமத்தை சேர்ந்த ராஜசேகர் என்பவர் மேற்படி டிராக்டரை சுழல் கலைப்பையுடன் திருடிச் சென்றது தெரியவந்தது. மேற்படி நபரை கைது செய்து வழக்குப்பதிவு செய்த மங்களமேடு காவல்நிலைய உதவி ஆய்வாளர் சங்கர் தலைமையிலான போலீசார் காணாமல் போன டிராக்டரை பறிமுதல் செய்து குற்றவாளியை நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர்.