பெரம்பலூர் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் அரங்கில் தமிழக மக்கள் முன்னணி சார்பில் தமிழ்நாடு நாள் விழா நிகழ்ச்சி இன்று மாலை நடைபெற்றது, தமிழக மக்கள் முன்னணியின் நிலவன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், சென்னை தாய் தமிழ் கலைக்குழு, அரக்கோணம் மனிதம் கடைக் குழு, ஈரோடு கற்றல் கலையகம், ஐப்பேடு மாற்றம் கலைக்குழு ஆகிய கலைக் குழுவைச் சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்ட நிகழ்ச்சியில், பண்பாட்டு கலையுடன் தமிழ் எழுச்சி ஆடல் பாடல்கள் நிகழ்ச்சியுடன் துவங்கியது , இதில் இளைஞர் மாணவர் இயக்கம் பாவெல் , தற்சார்பு விவசாயிகள் சங்கத்தில் பொன்னையன், தமிழ்நாடு பொதுவுடமை கட்சியின் செல்வமணி, தமிழக தேச குடியரசு இயக்கத்தின் தமிழரசன், தமிழ் வழி கல்விகழகத்தின் சின்னப்பத்தமிழர்தமிழக மக்கள் முன்னணியில் செந்தமிழ் வேந்தன் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு, தமிழ்நாடு நாள் விழாவை வாழ்த்தியும் வலியுறுத்தியும் சிறப்பு கருத்தரங்கம் நடைபெற்றது இதில் தமிழ்நாட்டிற்கன தனிக்கொடி உருவாக்க, தமிழ்நாட்டு அரசிடம் வலியுறுத்துவோம், அரசு அறிவிக்கும் கொடியை தமிழ்நாடும் மூளை முடுக்கெல்லாம் ஏற்றுவோம் என்ற விஷயங்களை முன் வைத்து பேசினார்கள். மேலும் கருத்தரங்கில் அறிஞர்கள் மற்றும் ஆளும் நேயர்களுக்கு பாட்டுகள் பரிசுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.