பல்வேறு திட்ட பணிகளுக்கு அமைச்சர் அடிக்கல் நாட்டில் வைத்தார்

66பார்த்தது
போக்குவரத்துத்துறை அமைச்சர் சா. சி. சிவசங்கர் மாவட்ட ஆட்சித்தலைவர் கிரேஸ் பச்சாவ் தலைமையில் பெரம்பலூர் மாவட்டம் வேப்பூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் ரூ. 11. 98 கோடி மதிப்பீட்டில் பல்வேறு புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, ரூ. 5 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட வேப்பூர் பேருந்து நிழற்குடையினை மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்கள்.
இந்நிகழ்வுகளில் ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் தேவநாதன், நெடுஞ்சாலைத்துறை கோட்டப்பொறியாளர் கலைவாணி, வேப்பூர் ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவர் பிரபா செல்லப்பிள்ளை, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் துரைசாமி, அட்மா தலைவர் வீ. ஜெகதீசன், மாவட்ட ஊராட்சிக்குழு துணைத்தலைவர் முத்தமிழ்ச்செல்வி மதியழகன், மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் மரு. கருணாநிதி, வேப்பூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் செல்வகுமார், பூங்கொடி, குன்னம் வட்டாட்சியர் கோவிந்தம்மாள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி