தற்போது நாம் பயன்படுத்தும் கத்திரிக்கோல்கள் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு உருவாக்கப்பட்டவை. ரோமானியர்கள் இத்தகைய கத்திரிக்கோல்களை உருவாக்கியிருக்கலாம் என நம்பப்படுகிறது. 16ம் நூற்றாண்டிலிருந்துதான் வீடுகளில் கத்திரிக்கோல்கள் பயன்படுத்தும் வழக்கம் வந்தது. உறுதியான பொருட்களை வெட்டுவதற்கான கத்திரியை உருவாக்கியவர் ராபர்ட் ஹஞ்சலிபி ஆவார். 1761-ல் ‘பிரிசிசன்’ எனப்படும் முந்து கத்திரிக்கோலை தயாரித்தார்.