PAN 2.0 திட்டத்தை மத்திய அரசு நேற்று வெளியிட்டுள்ளது. வரி செலுத்துவோருக்கு மேம்படுத்தப்பட்ட டிஜிட்டல் அனுபவத்தை வழங்குவதற்காக QR குறியீடு உட்பட புதிய அம்சங்களுடன் PAN 2.0 அறிமுகம் செய்யப்படவுள்ளது. இந்நிலையில், புதிய பான் கார்டுகள் வந்துவிட்டால் பழைய பான்கார்டுகள் செல்லாதா என்ற கேள்வி அனைவருக்கும் எழுந்துள்ளது. இந்நிலையில், தற்போதுள்ள பான் எண்ணை மாற்றவேண்டிய அவசியமில்லை. இந்த மேம்படுத்தப்பட்ட பான் கார்டு இலவசமாகவே வழங்கப்படும் என மத்திய அமைச்சர் தெரிவித்துள்ளார்.