டாஸ்மாக் கடையை அப்புறப்படுத்த கோரி கிராம மக்கள் மனு

69பார்த்தது
டாஸ்மாக் கடையை அப்புறப்படுத்த கோரி கிராம மக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு.


பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் வட்டம், ஆலத்தூர் கிராமத்தைச் சேர்ந்த கிராம பொதுமக்கள் 50 க்கு மேற்பட்டோர் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளித்தனர் அதனைத் தொடர்ந்து அவர்கள் தெரிவித்த போது, ஆலத்தூர் அருகே உள்ள இரூர் பிரிவு சாலையில் இருந்து கொளக்காநத்தம் செல்லும் சாலையில் அரசு டாஸ்மாக் மதுபான கடை இயங்கி வருவதாகவும், இதில் மது பிரியர்கள் அப்பகுதியில், மதுவை குடித்துவிட்டு அப்பகுதியில் உள்ள வயல் நிலங்களில் மது பாட்டில்களை உடைத்து போட்டு வருவதால் விவசாயிகளுக்கு இடையூறாகும் மேலும் அப்பகுதி வழியாக பள்ளி செல்லும், வாகனங்கள், மற்றும் மாணவ, மாணவிகளுக்கும், பெண்களுக்கும், இடையூறாக உள்ளதாகவும், அதனால் அந்த மதுபான கடையை அங்கிருந்து அகற்ற வேண்டும் என மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளித்திருப்பதாக தெரிவித்துள்ளனர்.

பேட்டி: K. பாக்கியராஜ், ஆலத்தூர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி