
பெரம்பலூர்: மது பாட்டில்களை விற்பனை செய்த 2 பேர் கைது
பெரம்பலூர் மாவட்டம், மருவத்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பேரளி பகுதியில் சட்டவிரோதமாக மது விற்பனை நடைபெறுவதாக கிடைத்த ரகசிய தகவலின் படி போலீசார் ரோந்து மேற்கொண்டு வந்த நிலையில் இன்று மதியழகன் (37), ராமு (37), ஆகிய இரண்டு நபர்களும் மது பாட்டில்களை விற்பனை செய்து கொண்டிருந்த இருவரையும் போலீசார் கைது செய்து வழக்கு பதிவு செய்து அவர்களிடமிருந்து 30 பாட்டில்கள் பறிமுதல் செய்து இருவரையும் நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர்.