கிருஷ்ணகிரி மாவட்டம் உத்தனப்பள்ளி, உலகம், பாகலூர், தேன்கனிக்கோட்டை, கெலமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் சாகுபடி செய்துள்ள தக்காளி செடிகளில் நோய் தாக்கி, தக்காளி பிஞ்சிலேயே பழுத்து வெதும்பி கீழே உதிர்கின்றன. இதனால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். எனவே, தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் நேரில் வந்து, எந்த வகையான நோயால் தக்காளி செடிகள் பாதிக்கப்பட்டுள்ளது என ஆய்வு செய்து, மாற்று மருந்து தெளிக்க உரிய ஆலோசனை வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.