பெரம்பலூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் ரூ. 1. 85 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் துணை சுகாதார நிலையங்கள், அரசு தலைமை மருத்துவமனையில் கட்டப்பட்டுள்ள சித்த மருத்துவப் பிரிவு கட்டடங்களை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் அவர்கள் மற்றும் போக்குவரத்துத்துறை அமைச்சர் சா. சி. சிவசங்கர் ஆகியோர் மாவட்ட ஆட்சித்தலைவர் கிரேஸ் பச்சாவ் தலைமையில் இன்று (05. 11. 2024) கை. களத்தூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் திறந்து வைத்தார்கள்
இந்நிகழ்ச்சியில் பெரம்பலூர் பாராளுமன்ற உறுப்பினர் கே. என். அருண்நேரு, பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் ம. பிரபாகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இன்றைய நிகழ்ச்சியில் கை. களத்தூர் மற்றும் அரும்பாவூரில் தலா ரூ. 60 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள ஆரம்ப சுகாதார நிலைய கட்டடங்களையும், கல்பாடி மற்றும் குரும்பலூர் பகுதிகளில் தலா ரூ. 20 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள துணை சுகாதார நிலைய கட்டடங்களையும், பெரம்பலூர் அரசு தலைமை மருத்துவமனையில் ரூ. 25 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள சித்த மருத்துவப் பிரிவு கட்டடத்தையும் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் அவர்கள் மற்றும் போக்குவரத்துத்துறை அமைச்சர் சா. சி. சிவசங்கர் ஆகியோர் இன்று திறந்து வைத்தார்கள்.