சென்னை மடிப்பாக்கம் ராம் நகரில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பின் மொட்டை மாடியில், காய வைக்கப்பட்டிருந்த துணியை எடுக்கும்போது தவறி கீழே விழுந்ததில் ஹரிணி (15) என்ற சிறுமி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மழை காரணமாக மாடியில் இருந்த துணியை எடுக்கச்சென்றபோது கால் இடறி கீழே விழுந்துள்ளார். படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் ஹரிணி உயிரிழந்துள்ளார். இதுகுறித்து போலீஸ் விசாரித்துவருகின்றனர்.