விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

53பார்த்தது
பெரம்பலூர் மாவட்ட ஆட்சியரகத்தில் வேளாண்மை உழவர் நலத்துறை சார்பில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட வருவாய் அலுவலர் வடிவேல் பிரபு தலைமையில் நேற்று நடைபெற்றது.
முன்னதாக, வேளாண்மைத்துறை மூலம் வேப்பூர் வட்டத்தில் 3 விவசாயிகளுக்கு ரூ. 1, 584 மானியத்தில் குதிரைவாலி விதைகள், வேப்ப எண்ணெய், பருத்தி பூச்சி கட்டுப்பாட்டு சிறுதழை தொகுப்புகளும், வேப்பந்தட்டை வட்டத்திற்குட்பட்ட 3 விவசாயிகளுக்கு ரூ. 1, 45, 986 மானியத்தில் மின்கல தெளிப்பான், சொட்டு நீர் பாசனக் கருவி போன்ற வேளாண் கருவிகளும், தோட்டக்கலைத்துறை (ம) மலைப்பயிர்கள் துறை சார்பில் 4 விவசாயிகளுக்கு ரூ. 20, 550 மானியத்தில் பழமரதொகுப்பு, எலுமிச்சைக் கன்று மற்றும் தென்னை மர கன்றுகள் பரப்பு விரிவாக்கத்திற்கும், வேளாண்மை பொறியியல் துறை சார்பில் 02 விவசாயிகளுக்கு ரூ. 1, 51, 200 மானியத்தில் விசை களையெடுக்கும் கருவிகளும் என மொத்தம் 12 பயனாளிகளுக்கு ரூ. 3, 19, 320 மானியத்திலான வேளாண் இடுப்பொருட்கள் மற்றும் வேளாண் உபகரணங்களை மாவட்ட வருவாய் அலுவலர் வழங்கினார்.
இக்கூட்டத்தில், சார் ஆட்சியர் கோகுல், மாவட்ட வருவாய் அலுவலர்/தலைமை நிர்வாகி பெரம்பலூர் சர்க்கலை ஆலை ரமேஷ், வேளாண்மை இணை இயக்குநர் கீதா, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(வே. ) ராணி, கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் பாண்டியன் (ம) பல்வேறு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி