'முதலமைச்சரின் காலை உணவு’ திட்டத்தால் 90% மேற்பட்ட குழந்தைகளிடம் நினைவாற்றல் அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பள்ளிகளுக்கு குழந்தைகள் குறித்த நேரத்தில் வருவது அதிகரித்துள்ளது எனவும், குழந்தைகளிடம் கற்றல் ஆர்வம், வகுப்பறைக் கவனிப்பு, விளையாட்டில் ஈடுபாடு ஆகியவற்றில் கணிசமான முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என மாநில திட்டக்குழு அளித்த மதிப்பீடு அறிக்கையில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.