தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே அதி வேகமாக வந்த பள்ளி வேன், வயல்வெளியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 10க்கும் மேற்பட்ட மாணவர்கள் காயம் அடைந்தனர். சப்தம் கேட்டு ஓடி வந்த விவசாயிகள், கண்ணாடிகளை உடைத்து மாணவர்களை மீட்டு சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பள்ளி வேன் அதிவேகமாக வந்ததே விபத்திற்கு காரணம் என விபத்தை நேரில் பார்த்தவர்கள் குற்றம் சாட்டினார்கள்.