பெரம்பலூர் மாவட்டம், குன்னம் வட்டத்திற்குட்பட்ட வேள்விமங்கலம் கிராமத்தில் வடகிழக்கு பருவமழை தொடர்பாக மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து பெரம்பலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் கிரேஸ் பச்சாவ் நேற்றிரவு நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது துறை சார்ந்த அரசு அலுவலர்கள் பலர் உடன் இருந்தனர்.