புதுக்கோட்டை மாவட்டம் மாத்தூர் அடுத்த இறைவன் நகரில் ரயில்வே அதிகாரி ஒருவரை வீட்டில் சுமார் 40 நாய்கள் வளர்க்கப்பட்டு வந்துள்ளது. இந்த நாய்களின் தொல்லையால், பக்கத்தில் குடியிருந்த குடும்பம் ஒன்று வீட்டை காலி செய்துவிட்டுச் சென்றதாக கூறப்படுகிறது. இதுகுறித்து மாவட்ட நிர்வாகத்திடம் அப்பகுதி மக்கள் புகார் அளித்தனர். அதன் பேரில் சம்பவ இடத்திற்குச் சென்ற அதிகாரிகள், வீட்டில் வளர்க்கப்பட்டு வந்த நாய் குட்டிகள் உள்பட 40 நாய்களை பிடித்துச் சென்றனர்.