காங்கேயத்தில் 6 பேரை கடித்த வெறிநாய் - பொதுமக்கள் அச்சம்

77பார்த்தது
திருப்பூர் மாவட்டம் காங்கேயம் நகராட்சிக்கு உட்பட்ட உடையார் காலனி பகுதியில் 6 பேரை கடித்த வெறிநாய். பொதுமக்கள் பீதி, நாயை பிடித்து அப்புறப்படுத்த நகராட்சிக்கு கோரிக்கை 


காங்கேயம் நகராட்சிக்கு உட்பட்ட 9 வார்டு உடையார் காலனி பகுதியில் வசிக்கும் 5 நபர்கள் மற்றும் நகராட்சி தூய்மை பணியாளர் ஒருவர் என 6 பேரை ஒரே நாய் கடித்ததில் காயம் அடைந்துள்ளனர். வசந்தி 56, வெங்கடாசலம் 52(தூய்மை பணியாளர்), மோகன்ராஜ் 47, பாலசுப்ரமணியம் 79, உலகநாதன் 47 ரித்தீஷ் 13 மற்றும் இதே பகுதியில் மேய்ந்து கொண்டிருந்த ஒரு மாட்டையும்  கடித்து காயம் ஏற்பட்டுள்ளது. காங்கேயம் அரசு தலைமை மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சைக்கு பின், மேல் சிகிச்சைக்காக திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பரிந்துரை செய்யப்பட்டனர். ஒரே பகுதியில் 6பேரை கடித்த வெறி நாயால் பொதுமக்கள் பீதி அடைந்து உள்ளனர். நகராட்சி நிர்வாகம் நாயை பிடித்து அப்புறப்படுத்த வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. காங்கேயம் சுற்றுவட்டார பகுதிகளில் ஆடு, மாடு போன்ற கால்நடைகளை தாக்கி விவசாயிகளுக்கு பேரிழப்பை ஏற்படுத்தி வந்த நாய்களின் தொல்லை தற்போது மனிதர்களையும் கடித்து குதறிய சம்பவம் அங்கங்கே அரங்கேறி வருகிறது. உடனடியாக நாய்களை அப்புறப்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை முன்வைக்கின்றனர்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி