தந்தை பெரியாருக்கு நடிகர் சிவகுமார் புகழாரம் சூட்டியுள்ளார். திருவண்ணாமலையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தான் வரைந்த பெரியாரின் ஓவியத்தை திரையிட்டு மாணவர்கள் மத்தியில் பேசிய சிவகுமார், "கீழ் சாதிக்காரன் என மக்கள் அவமானப்படுத்தப்பட்டிருக்கும்போது.. ஒடுக்கப்பட்ட மக்களில் இருந்து IAS, IPS வருவதற்கு போராடிய ஒரே போராளி பெரியார். நான் 2007-ல் வரைந்த கடைசி பிரமாதமான ஓவியம் பெரியார் ஓவியம் தான்" என்று தெரிவித்தார்.