திருப்பூர் மாவட்டம் பல்லடம் நகராட்சி பகுதியில் 18 வார்டுகள் உள்ளன. இந்நிலையில் பல்லடம் நகராட்சிக்கு உட்பட்ட என்ஜிஆர் சாலையில் குடிநீர் குழாய் உடைந்து தண்ணீர் சாலையில் வீணாக சென்றது. இதனையடுத்து நகராட்சி நிர்வாகத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக சமூக ஆர்வலர் கூட்டமைப்பு தலைவர் அண்ணாதுரை சாலையில் வீணாகும் செல்லும் நீரில் பேப்பரில் கப்பல் செய்து எதிர்ப்பை தெரிவித்தார். மேலும் பல்லடம் நகராட்சி உட்பட்ட வார்டு பகுதியில் நகராட்சி நிர்வாகம் குடிநீர் மக்களுக்கு சரியாக விநியோகம் செய்வதில்லை. குடிநீர் வழங்குமாறு நகராட்சி நிர்வாகத்திடம் முறையிட்டால் அத்திகடவு திட்டத்தில் குடிநீர் பற்றாக்குறையாக வருவதால் போதுமான குடிநீர் மக்களுக்கு விநியோகம் செய்ய முடியவில்லை என கூறி வருகின்றனர். இந்நிலையில் பல்லடம் நகராட்சிக்கு உட்பட்ட பல பகுதிகளில் குடிநீர் குழாய்கள் உடைந்து தண்ணீர் சாலையில் வீணாக செல்கிறது. என். ஜீ. ஆர் சாலையில் ஒன்றரை ஆண்டாக குடிநீர் குழாய் உடைந்து தண்ணீர் சாலையில் செல்வதால் பலமுறை நகராட்சி நிர்வாகத்திடம் தெரிவித்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என நகராட்சி நிர்வாகத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த கப்பல் விடும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம் என தெரிவித்தார்.