கூவத்தூர் ரகசியம் குறித்து முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ள பகீர் தகவலால் தமிழக அரசியலில் பூகம்பம் வெடித்துள்ளது. தந்தி தொலைகாட்சிக்கு ஓபிஎஸ் அளித்த பிரத்யேக பேட்டியில், "அன்று எடப்பாடி பழனிசாமி ஆட்சியமைக்க கூவத்தூரில் அதிமுக எமஎல்ஏக்களுக்கு பல கோடி ரூபாய் பணம் மற்றும் தங்கம் வழங்கப்பட்டது. எவ்வளவு தங்கம் தரப்பட்டது என்று வெளிப்படையாக சொல்ல முடியாது. நீங்கள் வழக்கு தொடர்வீர்கள்" என்று குண்டை தூக்கிப் போட்டுள்ளார்.