விழுங்கிய பாம்பை நாகப்பாம்பு கக்கும் வீடியோ இணையத்தில் வெளியாகி ரத்தத்தை சில்லிட வைத்துள்ளது. கடலூர் மாவட்டம் செம்மண்டலம் ரட்சகர் நகரில் ஓய்வு பெற்ற அலுவலர் பரமகுரு வீட்டில் 6 அடி நீள பாம்பை விழுங்கியதால் நாகப்பாம்பு ஒன்று நகர முடியாமல் படுத்துக்கொண்டிருந்துள்ளது. இதைக்கண்ட வீட்டு உரிமையாளர் பரமகுரு கொடுத்த தகவலின் பேரில் வன உயிரின ஆர்வலர் செல்லா பாம்பை லாவகமாக பிடித்து காப்பு காட்டில் விட்டுள்ளார்.