ஸ்ரீவில்லிபுத்தூர் - Srivilliputhur

விருதுநகர்: வனவிலங்குகளை வேட்டையாடிய இரண்டு பேர் அதிரடி கைது

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே முயல் மற்றும் காடை வேட்டையாடிய இரண்டு பேரை பிடித்து வனத்துறையினர் தலா ரூ. 10,000 அபராதம் விதித்தனர். ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள அழகாபுரி பகுதியில் முயல் வேட்டை நடைபெறுவதாக வன பாதுகாப்புப் படை அதிகாரி மலர் கண்டனுக்கு தகவல் கிடைத்தது.  இதனைத் தொடர்ந்து அவரது உத்தரவின் பேரில் வன பாதுகாப்புப் படை ரேஞ்சர் கார்த்திகேயன் தலைமையில் வனத்துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது முயல் மற்றும் காடை விலங்குகளை வேட்டையாடிய இரண்டு பேரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் பேரையூர் பகுதியைச் சேர்ந்த ஜெகன் மற்றும் தினேஷ் என்பது தெரிய வந்தது.  இதனைத் தொடர்ந்து வன பாதுகாப்புப் படை ரேஞ்சர் கார்த்திகேயன் ஸ்ரீவில்லிபுத்தூர் வனத்துறை ரேஞ்சர் செல்லமணியிடம் இரண்டு பேரையும் ஒப்படைத்தார். வனத்துறை ரேஞ்சர் செல்லமணி இரண்டு பேருக்கும் தலா ரூ. 10,000 அபராதம் விதித்தார். மேலும் வேட்டையாடப் பயன்படுத்தப்பட்ட உபகரணங்கள் மற்றும் நெத்திலைட் ஆகியவற்றை வனத்துறையினர் பறிமுதல் செய்தனர்.

வீடியோஸ்


விருதுநகர்