ஸ்ரீவில்லிபுத்தூர் - Srivilliputhur

சதுரகிரி கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு 4நாட்கள் அனுமதி

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலில் நடைபெறும் புரட்டாசி மாத பிரதோஷம் மற்றும் பெளர்ணமியை  முன்னிட்டு வரும் 15 ஆம் தேதி முதல் 18 ஆம் தேதி வரை 4 நாட்கள் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலுக்கு பக்தர்கள் செல்ல வனத்துறை அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் அமைந்துள்ளது பிரசித்தி பெற்ற சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயில். இந்த கோயிலானது கடல் மட்டத்திலிருந்து சுமார் 4500 அடி உயரத்தில் அமைந்து உள்ளது. சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலுக்கு கோயிலுக்கு மாதந்தோறும் நடைபெறும் பிரதோஷம், அமாவாசை, பௌர்ணமி உள்ளிட்ட விசேஷ நாட்களில் 4 நாட்கள் மட்டுமே பக்தர்கள் கோயிலுக்கு செல்ல அனுமதி என்பது வழங்கப்பட்டு வருகிறது. மேலும் சதுரகிரி கோவிலுக்கு காலை 6 மணி முதல் பகல் 12 மணி வரை மட்டுமே அனுமதி எனவும், இரவில் மலையில் தங்குவதற்கு அனுமதி இல்லை எனவும், நீரோடைகளில் குளிக்க அனுமதி இல்லை எனவும் வனத்துறை சார்பில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டடுள்ளது.

வீடியோஸ்


விருதுநகர்
Sep 13, 2024, 14:09 IST/விருதுநகர்
விருதுநகர்

விழிப்புணர்வு குறும்படம் அனுப்பலாம்; ஆட்சியர் அறிவிப்பு

Sep 13, 2024, 14:09 IST
விருதுநகர் மாவட்டம் மாவட்ட சமூக நலத்துறை சார்பில், பெண்கள் எதிர்கொள்ளும் குழந்தை திருமணம் தடைச்சட்டம்-2006, பாலியல் துன்புறுத்தல் தடுப்பு, தடை, தீர்வு, சட்டம் - 2013 ஆகிய சட்டங்களை மையக் கருத்தாக கொண்டு விழிப்புணர்வு குறும்படம் தயாரித்து அனுப்புவதற்கான போட்டிகள் நடைபெற உள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் வீ.ப.ஜெயசீலன் அறிவித்துள்ளார். போட்டிக்கான தலைப்புகள் குழந்தை திருமணம் தடைச் சட்டம் - 2006 ,பணியிடங்களில் பெண்கள் எதிர்கொள்ளும் பாலியல் துன்புறுத்தல் சட்டம் - 2013 ஆகிய சட்டங்களை மையக்கருத்தாக கொண்டு விழிப்புணர்வு குறும்படம் இருத்தல் வேண்டும். 5 நிமிடம் முதல் 7 நிமிடத்திற்குள் இருக்க வேண்டும். விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்தவராக இருத்தல் வேண்டும். குறும்படத்தினை தயாரித்து பென்ட்ரைவ்-ல் ஒப்படைக்க வேண்டும். குறும்படத்தின் தொடக்கத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை, விருதுநகர் மாவட்டம் என்பது குறிப்பிட்டிருக்க வேண்டும். பரிசுத் தொகை சிறந்த குறும்படத்திற்கு ரூ.50,000 முதல் பரிசாகவும், சான்றிதழும் வழங்கப்படும். இரண்டாவது பரிசாக ரூ.30,000 பரிசுத் தொகையும், சான்றிதழும் வழங்கப்படும் மூன்றாவது பரிசாக ரூ.15,000 பரிசுத் தொகையும், சான்றிதழும் வழங்கப்படும் 05.10.2024-க்குள் குறும்படம் தயாரித்து அனுப்ப வேண்டும்.