ஶ்ரீவில்லிபுத்தூர் அருகே வங்கியிலிருந்து பணம் எடுத்து வந்த கட்டிட தொழிலாளியை தாக்கி ரூ7. 5 லட்சம் பணத்தை பறித்து சென்ற மர்ம நபர்களுக்கு போலீஸார் வலைவீச்சு.
விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே தைலாகுளம் வடக்கு தெருவை சேர்ந்த அருணகிரி மகன் பெரியசாமி(56), இவர் கட்டிட வேலை செய்து வருகிறார். மேலும் பெரியசாமி சொந்தமாக இடம் வாங்குவதற்காக ஶ்ரீவில்லிபுத்தூர் கனரா வங்கி கிளையில் உள்ள சேமிப்பு கணக்கில் இருந்து நேற்று பிற்பகல் 3 மணி அளவில் ரூ. 7. 5 லட்சத்தை எடுத்துக் கொண்டு ஸ்கூட்டரில் வீட்டிற்கு வந்தார். அவரது மகனும், மனைவியும் மற்றொரு பைக்கில் வந்தனர். பெரியசாமி தைலாகுளத்தில் உள்ள வீட்டின் முன் வாகனத்தை நிறுத்திய போது, பின்தொடர்ந்து இரண்டு இருசக்கர வாகனத்தில் வந்த 4 பேர் கொண்ட கும்பல் பெரியசாமியை தாக்கி விட்டு, வாகனத்தில் இருந்த ரூ. 7. 5 லட்சத்தை பறித்து சென்றனர்.
மக்கள் அதிகமாக குடியிருப்பு பகுதியில் பகல் நேரத்தில் ஹெல்மெட், முகமூடி ஏதும் அணியாமல் வீட்டின் முன் நின்ற நபரை தாக்கி பணத்தை பறித்து சென்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவ இடத்தில் ஶ்ரீவில்லிபுத்தூர் டி. எஸ். பி ராஜா நேரில் ஆய்வு செய்து விசாரணை நடத்தி
அப்பகுதியிலுள்ள சிசிடிவி காட்சிகளை போலீஸார் ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் தப்பியோடிய மர்ம நபர்களை தனிப்படையினர் தேடி வருகின்றனர்.