ஸ்ரீவி: இரயில் மூலம் கஞ்சா கடத்தலா? தனிப்படை போலீஸார் சோதனை..

52பார்த்தது
ஸ்ரீவில்லிபுத்துார் இரயில் நிலையத்தில் ஆந்திராவில் இருந்து கஞ்சா கடத்தலா? தனிப்படை போலீசார் சோதனை.
விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்துார் மற்றும் சுற்று பகுதிகளுக்கு ஆந்திராவில் இருந்து கஞ்சா கடத்தி கொண்டு வரப்படுவதை தடுக்கும் வகையில், கொல்லம், பொதிகை இரயில்களில் ஸ்ரீவில்லிபுத்தூர் இரயில்வே ஸ்டேஷனில் இரயில்வே தனிப்படை போலீசார் திடீர் சோதனை நடத்தினர். ஆந்திரா, தெலுங்கானா, ஒரிசா போன்ற மாநிலங்களிலிருந்து ஏராளமான மாணவர்கள் கிருஷ்ணன்கோவிலில் தங்கி அங்குள்ள கல்லுாரிகளில் படித்து வருகின்றனர். இதில் கடந்த சில மாதங்களாக கஞ்சா கடத்தி வந்ததாக, 6க்கும் மேற்பட்ட மாணவர்கள் கைது செய்யப்பட்டு இருந்த போதிலும் கிருஷ்ணன்கோவில் பகுதியில் தொடர்ந்து கஞ்சா நடமாட்டம் இருந்து வருகிறது. இந்நிலையில் தீபாவளி பண்டிகை விடுமுறையை முன்னிட்டு தங்கள் சொந்த மாநிலத்திற்கு சென்று விட்டு, நேற்று காலை ஏராளமான
மாணவர, மாணவிகள் கொல்லம், பொதிகை எக்ஸ்பிரஸ் இரயில்களில் ஸ்ரீவில்லிபுத்தூர் திரும்பினர். அவ்வாறு வருபவர்கள் கஞ்சா கடத்தி கொண்டு வரப்படுவதை தடுக்கும் வகையில், போதைப் பொருள் தடுப்பு பிரிவு தனிப்படை போலீசார் சோதனை நடத்தினர். ஆனால் சோதனையில் எதுவும் பிடிபட வில்லை என தனிப்படை போலீஸார் தெரிவிக்கின்றனர். மேலும் இந்த தொடர்ச்சியாக நடைபெறும் என காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி